வவுனியா நகரில் திடீர் சோதனை நடவடிக்கை
வவுனியா பொலிஸாருடன் இணைந்து பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மோட்டார் சைக்கிள்களில் வவுனியா நகரில் திடீர் சோதனை நடவடிக்கை ஒன்றினை இன்று முன்னெடுத்திருந்தனர்.
வவுனியா உட்பட நாடு முழுவதும் மூன்று நாட்கள் பயணத்தடை விதிக்கப்பட்டு
பொதுமக்கள் வெளியில் நடமாடத்தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அத்தியாவசிய தேவைகள்
மற்றும் மருத்துவ சேவைகள், ஆடைத்தொழிற்சாலை என்பனவற்றுக்கு மாத்திரம் அனுமதி
வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது அனுமதியின்றி வர்த்தக நிலையத்தினை திறந்திருந்தவர்கள், அனுமதிப்பத்திரமின்றி பொருட்களை ஏற்றிச்சென்ற வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் நடமாடியவர்கள், ஆடைத்தொழிச்சாலை அனுமதிப்பத்திரத்துடன் வேறு நபர்களை ஏற்றிச்சென்ற வாகனங்கள் என்பன பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவினரினால் மடக்கிப்பிடிக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
மேலும், அனுமதிப்பத்திரமின்றி தென்பகுதி மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து
வவுனியாவிற்கு வருகை தந்துள்ளமையும் இதன் போது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு
எதிராக முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டன.







படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri
