யாழில் இடைநடுவில் புகுந்து எரிபொருள் பெற முயன்ற அமைச்சர்களின் வாகனங்கள்: எரிபொருள் நிலையத்தில் பதற்றநிலை (Photo)
யாழ்ப்பாணத்திற்கு வந்த பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரன மற்றும் பனை தென்னை வள உற்பத்தி கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னான்டோ ஆகியோரின் வாகனங்களிற்கு இடையில் புகுந்து எரிபொருள் பெற முயன்றமையினால் பெரும் குழப்பம் ஏற்பட்டது.
இரு அமைச்சர்கள் யாழ்ப்பாணம் வருகை தந்தபோது ஐந்து வாகனங்களில் வருகை தந்திருந்தனர். திரும்பிச் செல்வதற்காக வாகனத்திற்கு எரிபொருள் நிரப்ப யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள எரிபொருள் விற்பனை நிலையத்திற்கு வருகை தந்தனர்.
இதன்போது குறித்த எரிபொருள் விற்பனை நிலையத்தில் நூற்றிற்கும் மேற்பட்ட வாகனங்கள் வரிசையில் காத்திருந்தபோது அமைச்சரின் வாகனத்திற்கு உடனடியாக டீசல் கொள்கலனை முழுமையாக நிரப்ப முயன்றனர்.
இதன்போது எரிபொருளிற்காகக் காத்திருந்த வாகன உரிமையாளர்கள் "உங்களால் தான் நாம் வரிசையில் நிற்கின்றோம். கொலைகாரப் பாவிகளா, இந்த நிலைமையில் எமக்கு 3 ஆயிரத்திற்கு மட்டுமே டீசல், கொலைகாரரிற்கு முழுமையாகக் கேட்கிறதா, அடிக்க முடியாது என கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதன்போது சம்பவத்தைச் செய்தியாக்கிய ஊடகவியலாளரையும் அமைச்சரின் உதவியாளர் படம்பிடித்து அச்சுறுத்தியதோடு, மக்களிடம் நீண்ட தர்க்கத்தில் ஈடுபட்டு அரை மணி நேரத்தின் பின்பு 11 ஆயிரத்து 200 ரூபாவிற்கு டீசலை நிரப்பி வெளியேறினர்.
இதன்போது மக்கள் "இவர்களால் வாழவும் முடியவில்லை, நிம்மதியாகச் சாகவும்
முடியவில்லை, அதேநேரம் எரிபொருளும் இல்லை, மின்சாரமும் இல்லாத நேரத்தில் 50
சதத்திற்குப் பிரயோசனம் இல்லாமல் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வருகின்றனர் என
தமது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தனர்.
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan