கினிகத்தேனையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்: ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி
கினிகத்தேனை - தியகல பிரதேசத்தில் பாணந்துறையிலிருந்து நுவரெலியா நோக்கிச்சென்ற கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ விபத்து இன்று (20) காலை இடம்பெற்றுள்ளது.
தீ பரவல் காரணமாக குறித்த வீதியுடனான போக்குவரத்து முற்பகல் 11 மணிமுதல் சுமார் ஒரு மணிநேரம் முற்றாக நிறுத்தப்பட்டிருந்ததாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காரில் பயணித்த 5 பேர் வெளியேற்றம்
இதனையடுத்து தீயை கட்டுப்படுத்த பொலிஸார் கடுமையாக முயற்சித்த போதிலும், கார் தீயில் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தீ விபத்தின் போது காரில் ஐந்து பயணித்துள்ள நிலையில், தீ பரவலை கட்டுப்படுத்த முயன்ற நபரொருவர் காயமடைந்து கினிகத்தேனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் இந்த ராசிகளின் வாழ்க்கையில் ஏற்படப்போகும் பாரிய மாற்றம்! Manithan
அவரது இரத்தத்திற்குப் பழிவாங்குவது உறுதி: தந்தையின் இறுதிச்சடங்கில் மொஜ்தபா கமேனி உருக்கம் News Lankasri