யாழ். நல்லூர் ஆலய வாகன பாதுகாப்பு நிலையம் சீல் வைப்பு (Photos)
யாழ். நல்லூர் ஆலய சூழலில் உள்ள வாகன பாதுகாப்பு நிலையத்தில் யாழ். மாநகர சபையினால் அனுமதிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் அறவிட்ட வாகன பாதுகாப்பு நிலையம் மாநகர அதிகாரிகளினால் மூடப்பட்டுள்ளது.
நல்லூர் கோவில் உற்சவகாலத்தில் பருத்தித்துறை வீதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக வாகனப் பாதுகாப்பு நிலையத்தில் பக்தர்களிடம் இருந்து அதிக பணம் அறவிடப்படுவதாக யாழ்.மாநகர சபைக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
மூடப்படுவதற்கான காரணம்
இந்த முறைப்பாட்டின் பிரகாரம் அதிகாரிகள் உரிய முறையில் கண்காணித்து குறித்த விடயம் உண்மை என உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து குறித்த வாகனப் பாதுகாப்பு நிலையம் யாழ்.மாநகர சபையினால் அறிவிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் அறவிட்டமையால் யாழ்.மாநகர சபையினால் பூட்டப்பட்டுள்ளது.

கட்டண அறிவிப்பு
இதற்கமைய துவிச்சக்கரவண்டிக்கு 20 ரூபாவும் மோட்டார் சைக்கிளுக்கு 30 ரூபாவும் முச்சக்கரவண்டி மற்றும் கார் ஆகியவற்றுக்கு 50 ரூபாவும் வானுக்கு 100 ரூபா எனவும் யாழ்.மாநகர சபையினால் கட்டண விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிர்ணய கட்டணங்களுக்கு அதிகமான கட்டணங்களை அறவிடுதல் மற்றும் மாநகர
சபையின் அங்கீகாரம் பெறாத ரசிதுகளை வழங்குதல் ஆகியவை கண்டறியப்பட்டால்
வாகனப் பாதுகாப்பு நிலையங்கள் உடன் மூடப்படும் என்று யாழ்.மாநகர சபை
அறிவித்துள்ளது.
அப்பாவின் கார்பன் காப்பி... ஜாய் கிறிஸில்டாவின் புதிய பதிவு! சிக்கப்போகும் மாதம்பட்டி ரங்கராஜ் Manithan
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri
புடின் - ட்ரம்ப் சந்திப்பு தேவை இல்லை... உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா முன்வைக்கும் யோசனை News Lankasri
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam