இலங்கையில் இன்று முதல் கட்டாயமாக்கப்படும் சட்டம்..! மீறினால் கடும் நடவடிக்கை
ஆசனப்பட்டி சட்டம் இன்று (20) முதல் நடைமுறைப்படுத்தப்படுவதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, வாகனங்களைச் செலுத்தும்போது ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களிலுள்ள அனைத்துப் பயணிகளும் ஆசனப்பட்டி அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொடூரமான முறையில் நடத்தப்பட்டுள்ள சலே..! பின்னணியில் புலம்பெயர் தமிழர்கள் - ஜனாதிபதிக்கு அவசர கடிதம்
ஆசனப்பட்டி அணிவதை கட்டாயமாக்க நடவடிக்கை
வாகனங்களில் முன் மற்றும் பின் இருக்கைப் பயணிகள் இருவரும் ஆசனப்பட்டி அணிவதைக் கட்டாயமாக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக வழங்கப்பட்டிருந்த சலுகைக்காலம் நேற்றுடன் (19) நிறைவடைந்த நிலையில் இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் சாதாரண வீதிகளில் பயணிக்கும் வாகனங்களின் சாரதியும், முன் இருக்கையில் பயணிக்கும் மற்றைய பயணியும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாகும் அதேவேளை, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் சாரதி உள்ளிட்ட அனைத்துப் பயணிகளும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கைதினை தடுக்க வெளிநாட்டிலிருந்து பசில் எடுத்த அவசர முடிவு ! மீண்டும் பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு