வாகன ஓட்டுனர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான செய்தி
ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் மக்கள் வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாண மக்கள் தவிர்ந்த அனைத்து மாகாண மக்களும் இந்த வசதியை பெற்றுக்கொள்ள முடியும் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (02.10.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வாகன வருமான அனுமதிப்பத்திம்
மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், இந்த புதிய முறையின் மூலம் மோட்டார் வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை (eRL 2.0) வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும்.
தற்போது வாகன வருவாய் அனுமதிப்பத்திரத்தை இணையவழி சேவை வழங்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.
எதிர்வரும் 7ஆம் திகதி முதல் எந்தவொரு மாகாணத்தின் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் இணையத்தளத்திற்குச் சென்று வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை இணையத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.
மேல்மாகாண இன்னும் சேர்க்கப்படவில்லை, மற்ற 8 மாகாணங்களும் தயாராக உள்ளன. அனைத்து அரசு சேவைகளுக்கான கட்டணங்களும் இணையவழி மூலம் செலுத்தப்படும்.
இணையவழி சேவை
மாநகர சபைகள், மாவட்ட செயலகங்கள் உட்பட 9 அரசு நிறுவனங்களை தேர்வு செய்து, முன்னோடி திட்டத்தை தொடங்கி செயல்படுத்தியுள்ளோம்.
வாடிக்கையாளர்களுக்கு வீட்டிலிருந்தே அனைத்து சேவைகளையும் இணையவழி மூலம் செலுத்தும் முறையை நாங்கள் தயார் செய்துள்ளோம்.
அடுத்த ஆண்டு மார்ச் 30 ஆம் திகதிக்குள் 100% இணையவழி மூல கட்டண சேவைகளை வழங்குவோம் என்று நம்புகிறோம் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

மரக்கிளைகளில் சிக்கிய சடலங்கள்... கரைகளில் அழுகும் மீன்கள்: டெக்சாஸ் பேரிடரின் கோர முகம் News Lankasri

12 ஆண்டுகளாக வேலையே செய்யாமல் ரூ.28 லட்சம் சம்பளம் வாங்கிய பொலிஸ்காரர்.., கண்டுபிடித்தது எப்படி? News Lankasri
