விலையேற்றத்தினை கண்டித்து வாகன பேரணி ஆர்ப்பாட்டம்! (VIDEO)
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேசத்தில் அரசின் விலையேற்றத்தினை கண்டித்து மக்கள் விடுதலை முண்ணனியினால் வாகன பேரணி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த வாகன பேரணி ஆர்ப்பாட்டம் இன்று (24) முன்னெடுக்கப்பட்டது.
கந்தளாய் நகரிலிருந்து ஆரம்பித்த வாகனத் தொரடணி முள்ளிப்பொத்தானை, தம்பலாகாமம், நான்காம் கட்டை ஊடாக திருகோணமலையை சென்றடைந்தது.
நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் கறுப்புக்கொடிகளை ஏந்திய வண்ணம் இவ்வாகன பேரணி இடம்பெற்றுள்ளது.
”அரசே விலையேற்றத்தை குறை”,”மக்களை கஷ்டப்படுத்தாதே”,”சுகபோகத்திற்கு மக்களை விற்காதே” போன்ற கோஷங்களுடன் இவ்வாகனப் பேரணி இடம்பெற்றுள்ளது.
இதன்போது கருத்துத் தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் திருகோணமலை மாவட்ட செயற்பாட்டாளர் அருண் ஹேமச்சந்திரா (Arun Hemachandra),
நாட்டில் நிலவி வருகின்ற பொருளாதார நெருக்கடி எரிபொருள் விலையேற்றம், அத்தியாவசிய பொருற்களின் விலையேற்றம் என்பவற்றுக்கு எதிராக குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தார்.
மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிப்பீடம் ஏறிய குறித்த அரசாங்கமானது மக்களை ஏமாற்றி வருகிறது, நாட்டினை சுபிட்சமான நாடாக மாற்றுவோம் என்ற பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிபீடம் ஏறிய இந்த அரசானது தற்போது எந்த வீட்டில் எரிவாயு உருளை கொள்கலன் வெடிக்குமோ என்ற பீதியில் மக்களை தள்ளியிருக்கிறது.
இந்த நாட்டிலே வாழ முடியாத நிலை காரணமாக ஆயிரக்கணக்கான நபர்கள் இந்த நாட்டை விட்டு வெளியே சென்று கொண்டு இருக்கிறார்கள், நத்தார் மற்றும் புதுவருட காலப்பகுதியில் மக்களது வாழ்க்கைச் சுமை நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு அதிகரித்து காணப்படுகிறது.
நாட்டில் அனைத்து அத்தியாவசியமன பொருட்களுக்கும் கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டிருக்கிறது, இது மக்களை துயரத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது.
இதனைத் தாம வன்மையாக கண்டிப்பதாகவும், இதற்கு கூடிய விரைவில் இந்த அரசாங்கம் தீர்வினைப் பெற்றுத் தரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த ஏமாற்றும் அரசை நம்பாமல் மக்கள் விடுதலை முன்னணியுடன் பயணித்து இந்த நாட்டினை மீண்டும் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்று திரள வேண்டும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.






பார்த்தாலே பசி எடுக்கும் மொச்சைப் பருப்பு கருவாட்டு குழம்பு : இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது! Manithan
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri