வாகனம் வாங்க காத்திருப்போருக்கான தகவல் - ஏப்ரல் முதல் விலைகளில் பாரிய மாற்றம்
இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் வாகன விலைகள் அதிகரிக்கும் என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏப்ரல் முதலாம் திகதி தொடக்கம் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு சுங்க வரியில் இரண்டரை சதவீதம் (2.5%) வரி விதிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது தொடர்பில் வாகன இறக்குமதியாளர்கள் மேலும் தகவலளிக்கையில்,
அந்த வகையில் சுமார் ஒரு கோடி மதிப்புள்ள வாகனத்தின் விலையானது 250,000 ரூபாவால் அதிகரிக்கும். இந்த வரி முன்பு 1.25 சதவீதமாக இருந்தது.

வரியை அதிகரிக்க ஒப்புதல்
இந்த நிலையிலேயே வரியை அதிகரிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, தொடர்புடைய வரியை சுங்கத்தில் செலுத்த வேண்டும்.
அதேவேளை ஜப்பானிய வாகன ஏல நிறுவனங்களிலும் வாகன விலைகள் அதிகரித்துள்ளன.
என்ற போதும், இதுவரை இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களுக்கு இந்த 2.5 சதவீதம் வரி விதிப்பு பொருந்தாது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |