வாகன இறக்குமதி தாமதம்! நாட்டில் கடுமையாக உயர்ந்துள்ள கார்களின் விலை
வாகனங்களை இறக்குமதி செய்வதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளதால், நாட்டில் பயன்படுத்திய கார்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இந்நிலை தொடருமானால் வாகன விலைகள் மேலும் உயரலாம் என வாகன விற்பனையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாத வாகன விலை மற்றும் இன்று (25) சந்தையில் கிடைக்கும் வாகன விலைகளை ஒப்பிடும் போது கடுமையான உயர்வு பதிவாகியுள்ளமை அவதானிக்கப்படுகின்றது.
உயர்ந்துள்ள விலைகள்
இதன்படி, டொயோட்டா – பிரீமியர் 2017இன் முந்தைய விலை ஒரு கோடியே நாற்பத்தாறு லட்சமாக இருந்த நிலையில், அதன் புதிய விலை ஒரு கோடியே எழுபத்தைந்து லட்சம் ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், Toyota - Vitz - 2018இன் முந்தைய விலை 80 லட்சமாக இருந்த நிலையில், அதன் புதிய விலை 93 லட்சம் ரூபாவாக பதிவாகியுள்ளது.
Toyota – Aqua G 2012இன் முந்தைய விலை 60 லட்சமாக இருந்த நிலையில், அதன் புதிய விலை 68 லட்சம் ரூபாவாக பதிவாகியுள்ளது.
Honda – Vessel2014இன் முந்தைய விலை 80 லட்சமாக இருந்த நிலையில், அதன் புதிய விலை ஒரு கோடியே மூன்று லட்சம் ரூபாவாக பதிவாகியுள்ளது.
Nissan – X-Trail 2015 இன் முந்தைய விலை 84 லட்சமாக இருந்த நிலையில், அதன் புதிய விலை ஒரு கோடியே இருபத்தேழு லட்சம் ரூபாவாக பதிவாகியுள்ளது.
சுஸுகி – வேகன் ஆர் 2014இன் முந்தைய விலை 47 லட்சமாக இருந்த நிலையில், அதன் புதிய விலை 57 லட்சம் ரூபாவாக பதிவாகியுள்ளது.
Suzuki – Alto – 2015இன் முந்தைய விலை 30 லட்சமாக இருந்த நிலையில், அதன் புதிய விலை 32 லட்சம் ரூபாவாக பதிவாகியுள்ளது.
ஜீ தமிழில் ஒளிபரப்பாக போகும் கில்லாடி ஜோடிஸ் நடன நிகழ்ச்சி... யார் யார் போட்டியாளர்கள், வீடியோ இதோ Cineulagam
கனடா, கிரீன்லாந்தை இணைத்து ட்ரம்ப் வெளியிட்ட புதிய அமெரிக்க வரைபடம் - உலகளவில் சர்ச்சை News Lankasri