இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள்! நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட விபரம்
கடந்த ஐந்து வருடங்களில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பான தகவல் வெளியிடப்பட்டள்ளது.
இதன்படி, நாட்டின் சனத்தொகையில் ஐவரில் ஒருவர் கடந்த ஐந்து வருடங்களில் வெளிநாட்டில் இருந்து வாகனத்தை இறக்குமதி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிக் கடனில் பெறப்பட்ட வாகனங்கள்
இது தொடர்பான தகவல்களை இன்றையதினம் நாடாளுமன்ற அமர்வின்போது நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வெளியிட்டுள்ளார்.
இவற்றில் 75% வாகனங்கள் வங்கிக் கடனில் பெறப்பட்டவை எனவும் இராஜாங்க அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
மேலும், வாகன இறக்குமதிக்கான வரியை டொலரில் செலுத்துவது தொடர்பான பிரேரணையை உள்ளடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
இதன்படி, 2015 முதல் 2020 வரை இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 2,498,714 ஆகும்.
2015 இல் - 652,446 வாகனங்கள் 2016 இல் 466,986 வாகனங்கள், 2017 இல் 448,320 வாகனங்கள், 2018 இல் 496,282 வாகனங்கள், 2019 இல் 332,452 வாகனங்கள், 2020 இல் 102,228 வாகனங்கள் என இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.