வாகன இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்ட தகவல்
கடந்த 2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்கள் ( நவம்பர் ) வரையிலான காலகட்டத்தில் வாகன இறக்குமதிக்காக 281 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன இறக்குமதிக்கான மொத்த செலவு
அத்தோடு தனியார் வாகனங்கள் மற்றும் வணிக வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களின் இறக்குமதிக்கான மொத்த செலவு 1,746 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

இதேவேளை, நவம்பர் 2025 நிலவரப்படி, சீன மக்கள் வங்கியுடனான அந்நிய செலாவணி பரிமாற்ற வசதி உட்பட மொத்த அதிகாரப்பூர்வ இருப்பு 6 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் இருந்துள்ளது.
இதற்கமைய, 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாத இறுதியுடன் ஒப்பிடும்போது, நவம்பர் மாதம் மத்திய வங்கியின் அதிகாரப்பூர்வ அந்நிய செலாவணி இருப்பு கணிசமாக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள்
இதேவேளை, ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், கடந்த ஆண்டின் முதல் 11 மாதங்களில் 1,737 பயன்படுத்தப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படாத சொகுசு வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு வாகனங்களில் ஃபெராரி, ரோல்ஸ் ராய்ஸ், போர்ஷே மற்றும் லம்போர்கினி வாகனங்கள் அடங்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளது.
மயில் செய்த வேலையால் மொத்தமாக ஜெயில் அனுப்பப்பட்ட பாண்டியன் குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri