எதிர்வரும் மாதங்களில் வாகன இறக்குமதி குறையும்..! சுங்கத் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் தகவல்
உள்ளூர் நுகர்வோர் அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை வாங்குவதால், எதிர்வரும் மாதங்களில் வாகன இறக்குமதி குறையும் போக்கு இருப்பதாக இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கோட தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய சட்ட நிலைமைகளின் கீழ், இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் மூன்று மாதங்களுக்குள் விற்கப்பட வேண்டும். அந்த காலத்திற்கு மேல் விற்க முடியாத வாகனங்களுக்கு வாகனத்தின் மதிப்பில் 3% அபராதம் விதிக்கப்படுகிறது.
இறக்குமதி
இதன் காரணமாக, சில வாகன விற்பனையாளர்கள் மாதத்திற்கு சுமார் ஐந்து லட்சம் ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டியுள்ளது. பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நாட்டிற்குள் இறக்குமதி ஓரளவு குறையக்கூடும்.

சீனப் புத்தாண்டு பருவத்திற்காக நாட்டின் துறைமுகங்கள் மற்றும் வர்த்தக மையங்கள் சுமார் மூன்று வாரங்களுக்கு மூடப்படுவதே இதற்கு முக்கிய காரணம். இருப்பினும், இந்த நிலைமை சுங்கத்தின் வருடாந்திர வருவாய் இலக்கை பாதிக்காது என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |