இலங்கையில் வாகனம் கொள்வனவு செய்ய காத்திருப்போருக்கான முக்கிய அறிவிப்பு
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை கொள்வனவு செய்யும் நோக்கில் முன்னதாகவே பணம் செலுத்த வேண்டாம் எனவும், இலங்கை வந்த பின் வாகனங்களை கொள்வனவு செய்யுமாறு இலங்கை வாகன இறக்குமதியாளர்கள், வாடிக்கையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாகன இறக்குமதி தொடர்பில் இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே கூறுகையில்,
வாகனங்களுடன் இலங்கைக்கு வரும் முதலாவது கப்பல் பெப்ரவரி 13ஆம் திகதி ஜப்பானில் இருந்து புறப்பட்டுள்ள நிலையில், விரைவில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையும்.
கடனுதவி கடிதங்கள்
வாகனங்களை இறக்குமதி செய்யும் போது ஜப்பானிய வங்கிகள் இலங்கை வங்கிகளின் கடனுதவி கடிதங்களை ஏற்றுக் கொள்வதில்லை என்ற வதந்திகளில் உண்மையில்லை.

கடந்த அரசாங்கத்தின் போது ஏற்பட்ட பிரச்சினைகளாலும், அப்போதைய அரசாங்கத்தின் தலையீட்டினால் கடன் பத்திரங்கள் இரத்து செய்யப்பட்டதாலும் வாகன இறக்குமதியில் சில சிக்கல்கள் ஏற்பட்டன.
தீர்க்கப்பட்டுள்ள பிரச்சினைகள்
ஆனால் தற்போது அந்த பிரச்சினைகளை தீர்க்கும் நிலைக்கு வந்துள்ளோம். இதன்படி, கடன் கடிதங்களை ஏற்றுக் கொள்வது தொடர்பான 80 தொடக்கம் 90 வீதமான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன.

வாகனங்களின் இறக்குமதி வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது. இதனால் எந்தப் பிரச்சினையும் இல்லை. வாடிக்கையாளர்கள் ஜப்பான், ஐரோப்பா, தாய்லாந்து, துபாய் போன்ற நாடுகளில் இருந்து வாகனங்களை வாங்க முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri
குணசேகரன் செய்த விஷயத்தால் பெண்கள் உச்சக்கட்ட அதிர்ச்சி.. எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam
ஈரானுக்கு இறுகும் நெருக்கடி... மத்திய கிழக்கில் போருக்குத் தயாராகும் அமெரிக்க விமானப்படை News Lankasri