வாகன இறக்குமதிக்கான அனுமதி தொடர்பில் வெளியான தகவல்
அமெரிக்க டொலர்களில் சுங்கத் தீர்வையை செலுத்தி வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குமாறு மத்திய வங்கி, அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
நாட்டில் நிலவி வரும் டொலர் பிரச்சினைக்கு தீர்வாக இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
டொலர்களில் சுங்கத்தீர்வை செலுத்தி வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டால், சிலரிடம் கையிருப்பில் உள்ள டொலர்களை சந்தைக்கு கொண்டுவர முடியும் என மத்திய வங்கி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
எவ்வாறெனினும், வழமையான முறையில் வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு அனுமதிக்கப்பட முடியாது எனவும், அது தற்போதைய பொருளாதார சூழ்நிலைக்கு உசிதமானதல்ல எனவும் இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அதி சொகுசு பண்டங்கள் இறக்குமதி செய்வதனை ரத்து செய்வதனை விடவும் அவற்றுக்கு கூடுதலாக வரி அறவீடு செய்வது மிகவும் பொருத்தமானதும் நடைமுறைச் சாத்தியமானதுமான தீர்வு என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ள சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பிரபலம்.. எங்கெல்லாம் சென்றுள்ளார் பாருங்க Cineulagam

இனியா செய்த விஷயம்.. ஷாக் ஆன வில்லன்! நம்பர் 1 ட்ரெண்டிங்கில் பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ Cineulagam

பாகிஸ்தான் ராணுவ தளங்களை தாக்கிய இந்திய விமானப்படை: BrahMos பயன்படுத்தப்பட்டிருக்க வாய்ப்பு News Lankasri
