சட்டவிரோதமாக மரப்பலகைகள் கடத்தப்பட்ட வாகனம் பறிமுதல் - ஒருவர் கைது

Sri Lanka Police Kilinochchi Mullaitivu Sri Lanka Police Investigation
By Sudaron Jul 09, 2026 07:23 AM GMT
Report

மாங்குளம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சட்டவிரோதமாக முதிரை மரப்பலகைகளைக் கடத்திச் சென்ற கப் ரக வாகனம் ஒன்றை, சினிமா பாணியில் பல கிலோமீற்றர் தூரம் துரத்திச் சென்று கிளிநொச்சி பொலிஸார் அதிரடியாகக் கைப்பற்றியுள்ளனர்.

இச்சம்பவத்தின் போது வாகனத்தின் சாரதி தப்பியோடியுள்ள நிலையில், அவரது உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாங்குளத்திலிருந்து ஏ9 வீதியூடாக யாழ்ப்பாணம் நோக்கி முதிரை மரப்பலகைகளை ஏற்றிக்கொண்டு கப் ரக வாகனம் ஒன்று பயணித்துள்ளது. இதன்போது ஏ9 வீதியில் பயணித்தால் பொலிஸாரிடம் மாட்டிக்கொள்ளலாம் என நினைத்த சாரதி, பொலிஸாரின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காக இரணைமடு சந்தியிலிருந்து உள்வீதியான திருவையாறு பகுதியூடாக வாகனத்தைச் செலுத்தியுள்ளார்.

சட்டவிரோதமாக மரப்பலகைகள் கடத்தப்பட்ட வாகனம் பறிமுதல் - ஒருவர் கைது | Vehicle Illegally Transporting Wooden Planks

அதேநேரம், திருவையாறு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுப்பதற்காக பொலிஸாரால் வீதித்தடை போடப்பட்டிருந்தது. அவ்விடத்தில் குறித்த கப் ரக வாகனத்தை பொலிஸார் மறித்து சோதனை செய்ய முற்பட்டபோது, சாரதி பொலிஸாரின் உத்தரவையும் மீறி அதிவேகமாக வாகனத்தைச் செலுத்தி தப்பியோடியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, கிளிநொச்சி பொலிஸார் உடனடியாக அந்த வாகனத்தை மோட்டார் சைக்கிள்களில் பின் தொடர்ந்து துரத்திச் சென்றனர்.

பொலிஸாரிடம் இருந்து தப்புவதற்காக சாரதி வாகனத்தை நிறுத்தாமல் அதிக வேகத்தில்:திருவையாறு பகுதியிலிருந்து இரத்தினபுரம் ஊடாகவும், அங்கிருந்து ஏ9 வீதி டிப்போ சந்தி ஊடாக கனகபுரத்திற்கும், பின்னர் கனகபுரம், உதயநகர் மற்றும் விவேகானந்தா வீதி ஊடாகவும், மீண்டும் பாரதிபுரம் வீதி வழியாக ஏ9 வீதி 155ஆம் கட்டைப் பகுதிக்கும் ஆபத்தான முறையில் செலுத்தியுள்ளார்.

சட்டவிரோதமாக மரப்பலகைகள் கடத்தப்பட்ட வாகனம் பறிமுதல் - ஒருவர் கைது | Vehicle Illegally Transporting Wooden Planks

பொலிஸார் ஓயாது துரத்திய நிலையில், ஏ9 வீதி 155ஆம் கட்டைப் பகுதியில் கப் ரக வாகனம் சென்றுகொண்டிருந்த போது, அதன் சக்கரத்தின் ஆணிகள் உடைந்ததால் வாகனம் மேற்கொண்டு செல்ல முடியாமல் வீதியில் நின்றது.

உடனடியாக வாகனத்தை நிறுத்திய சாரதி, பொலிஸார் நெருங்குவதற்குள் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். எனினும், வாகனத்தில் இருந்த சாரதியின் உதவியாளரை பொலிஸார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.

கைப்பற்றப்பட்ட கப் ரக வாகனத்தையும், அதிலிருந்த பெருமளவிலான சட்டவிரோத முதிரை மரப்பலகைகளையும் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு சென்றுள்ள பொலிஸார், கைது செய்யப்பட்ட உதவியாளரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் தப்பியோடிய சாரதியைத் தேடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சட்டவிரோதமாக மரப்பலகைகள் கடத்தப்பட்ட வாகனம் பறிமுதல் - ஒருவர் கைது | Vehicle Illegally Transporting Wooden Planks

சட்டவிரோதமாக மரப்பலகைகள் கடத்தப்பட்ட வாகனம் பறிமுதல் - ஒருவர் கைது | Vehicle Illegally Transporting Wooden Planks

முதலாம் இணைப்பு

கிளிநொச்சியில் சட்டவிரோதமாக மரப்பலகைகளை கடத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அதற்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவம் இன்று (09.07.2026) காலை இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு - மாங்குளம் பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் கப்ரக வாகனம் ஒன்றில் பெறுமதி வாய்ந்த முதிரை மரப்பலகைகளை ஏற்றிச் செல்லப்பட்டுள்ளது.

நாட்டை உலுக்கிய பயங்கர வன்முறை.. துபாயில் தீட்டப்பட்ட திட்டம் - வெளிவரும் அதிர்ச்சியூட்டும் பின்னணி

நாட்டை உலுக்கிய பயங்கர வன்முறை.. துபாயில் தீட்டப்பட்ட திட்டம் - வெளிவரும் அதிர்ச்சியூட்டும் பின்னணி

வாகனம் சோதனை

இந்த நிலையில் திடீரென கிளிநொச்சி பொலிஸார் ஏ9 வீதியின் 155ஆம் கட்டைப் பகுதியில் வாகனத்தை சோதனை செய்துள்ளனர்.

சட்டவிரோதமாக மரப்பலகைகள் கடத்தப்பட்ட வாகனம் பறிமுதல் - ஒருவர் கைது | Vehicle Illegally Transporting Wooden Planks

இதன்போது வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

ஓய்வூதியம் பெறப்போகும் அரச ஊழியர்களுக்கான அவசர அறிவிப்பு

ஓய்வூதியம் பெறப்போகும் அரச ஊழியர்களுக்கான அவசர அறிவிப்பு

GalleryGallery
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
நன்றி நவிலல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
நன்றி நவிலல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US