விபத்தில் மூன்று சிறுவர்கள் படுகாயம்! (Photos)
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் பயணித்த வாகனமொன்று சிறுவர்கள் மீது மோதியதில் மூன்று சிறுவர்கள் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்து சம்பவமானது நேற்று (13.05.2023) இடம்பெற்றுள்ளது.
வவுனியா- பேராறு பகுதியில் விபத்தில் பாதிக்கப்பட்ட வாகனத்தினை ஏற்றி சென்ற மற்றுமொரு வாகனம் வீதியால் சென்றுகொண்டிருந்த சிறுவர்கள் மீது மோதியதில் மூன்று சிறுவர்கள் காயமடைந்த
நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இதன்போது, விபத்துக்குள்ளான 13,15 மற்றும் 10வயதுடைய சிறுவர்கள் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு அவர்களில் ஒருவர், மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் மற்றும் ஒருவர் வவுனியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
போக்குவரத்து பொலிஸார் நடவடிக்கை
வாகனத்தினை ஓட்டி சென்ற சாரதி தப்பி சென்றுள்ள நிலையில் விபத்தினை ஏற்படுத்திய வாகனம் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்க்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு வீதி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





இது இங்கிலாந்து போலவே இல்லை... பாதிக்குப் பாதி புலம்பெயர்ந்தோர் வாழும் பிரித்தானிய நகரம் News Lankasri

ஒரே வாரத்தில் ரூ.48,000 கோடி லாபம்! அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அடைந்துள்ள புதிய உச்சம்! News Lankasri
