கோவிட் தொற்றாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து - இரு பெண்கள் பலி
பொலன்னறுவையில் இன்று காலை இடம்பெற்ற விபத்தொன்றில் இரு பெண்கள் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
இராணுவ பஸ்ஸொன்று ஜீப் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியமையால் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது துப்பரவு நிறுவனத்தில் பணியாற்றும் இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
பொலன்னறுவையில் இருந்து மன்னம்பிட்டிய தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு கோவிட் பாதிப்புக்குள்ளானவர்களை ஏற்றிச் சென்ற இராணுவ பஸ்ஸும், பொலன்னறுவை வைத்தியசாலைக்கு தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற சிறிய ஜூப் ஒன்றுமே விபத்தில் சிக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த மூன்று பெண்களின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் விபத்து நடந்த நேரத்தில் ஜீப்பில் 13 பேர் பயணம் செய்ததாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
