சீதுவ வாகன விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழப்பு!
சீதுவ – கொடுகொட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் சீதுவ – கொடுகொட வீதியில் பஞ்சானந்தா வித்தியாலயத்துக்கு அருகில் இன்றைய தினம் (19.03.2023) இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வான் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த 45 வயதுடைய தந்தையும், 14 வயது மகனும் உயிரிழந்துள்ளனர்.
விபத்து தொடர்பில் வானின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்
மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

திருமணம் முடிந்த சந்தோஷத்தில் குத்தாட்டம் போட்ட மணமகன்: உறைந்து போய் நின்ற மணமகள்: வீடியோ News Lankasri
