கோர விபத்தில் சுயநினைவினை இழந்த மகன்: தந்தை எடுத்துள்ள விபரீத முடிவு
நீர்கொழும்பு - திவுலப்பிட்டி வீதியில் 24 வயதுடைய இளைஞன் ஒருவர் வாகன விபத்தில் சிக்கி கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில், மூன்று மாதங்களாக சுயநினைவின்றி இருக்கும் மகன் குறித்து அவரது தந்தை மிகவும் கவலையில் இருந்ததாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும் வாகன விபத்தில் சிக்கிய இளைஞருக்கு ஆபத்தான விசேட சத்திரசிகிச்சையை வைத்தியர்கள் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சத்திரசிகிச்சை
இந்நிலையில், மனவேதனையில் இருந்த தந்தை தந்தை திவுலப்பிட்டிய, துனகஹ பலியப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள தனது வீட்டில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவித்துள்ளனர்.
48 வயதுடைய தந்தையின் மரணத்தின் பின்னர், சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட மகன் சுயநினைவு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மகேஷ் பாபுவின் வாரணாசி பட நிகழ்ச்சியில் பாட ஸ்ருதிஹாசன் வாங்கிய சம்பளம்... இத்தனை கோடியா? Cineulagam