நாட்டில் மொத்த சனத்தொகையில் 45 வீதமானோர் எதிர்நோக்கும் பிரச்சினை!
நாட்டின் மொத்த சனத்தொகையில் 45 வீதமானவர்கள் உணவுப் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இரசாயன உரத் தடை காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்களினால் மொத்த சனத்தொகையில் 45 வீதமானவர்கள் உணவு வேளைகளை குறைத்துக் கொள்ள நேரிட்டுள்ளது.
ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆய்வு மையத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மூலம் இது தெரியவந்துள்ளது.
மரக்கறி வகை
நாட்டின் 86 வீதமான மக்கள் உணவிற்காக பயன்படுத்தும் கறி வகைகளை குறைத்துக் கொண்டுள்ளனர் என ஆய்வில் மேலும் தெரியவந்துள்ளது.
பெரும்பான்மையான மக்கள் அருகாமையில் கிடைக்கக் கூடிய ஏதேனும் மரக்கறி வகையை உணவாக உட்கொள்ளப் பழகிக் கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
போசாக்கான உணவு
போஞ்சி, கரட் போன்ற மரக்கறி வகைகளின் நுகர்வு நியாயமான அளவு குறைந்துள்ளது.
புரதம், இரும்புச் சத்து போன்ற போசாக்கான உணவு வகைகள் உட்கொள்வோரின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.