உச்சத்தை தொட்ட மரக்கறிகளின் விலை
அண்மைக் காலமாக சந்தையில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்தவகையில் மட்டக்களப்பில் மரக்கறி விலைகள் பாரிய அளவில் அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, ஒரு கிலோ பச்சமிளகாய் 1,300 ரூபாவும், ஒரு கிலோ இஞ்சி 3,000 ரூபாவும், ஒரு கிலோ கரட் 500 ரூபாவாகவும் உயர்ந்துள்ளதாக மட்டக்களப்பு பொதுச் சந்தை மரக்கறி விற்பனையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் அவர்கள் கூறியுள்ளதாவது, தற்போது பச்சை மிளகாய்க்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஒரு கிலோ பச்சை மிளகாயை 1,200 ரூபாவுக்கு கொள்வனவு செய்து 1,300 ரூபாவுக்கு விற்பனை செய்கின்றோம்.
பெரும் சிரமத்திற்கு உள்ளாகும் மக்கள்
அதேவேளை, சந்தையில் ஒரு கிலோ இஞ்சி 3 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்வதுடன் சந்தையில் ஒரு கிலோ இஞ்சியைக் கொள்வனவு செய்ய முடியாது அந்தளவிற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கரட் ஒரு கிலோ 500 ரூபாவாகவும், உருழைக்கிழங்கு 240 ரூபாவாகவும் பெரிய வெங்காயம் 150 ரூபாவாகவும் உயர்ந்துள்ளது.
இவ்வாறான தட்டுப்பாடு விலை உயர்வு காரணமாகப் பொதுமக்கள் தமது உணவான கறிகளில் பச்சைமிளகாய் இஞ்சி போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ள முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
மலையகத்தில் மரக்கறி உற்பத்தி
அதேவேளை, மலையகத்தில் தற்போது காணப்படுகின்ற மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மரக்கறி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
மேலும், மலையக விவசாயிகளினால் பயிரிடப்பட்டுள்ள மரக்கறிகளின் அறுவடை காலம் நெருங்கியுள்ள நிலையில், தொடர்ந்தும் அதிகரித்து வரும் மழையின் காரணமாக குறித்த மரக்கறிகள் அழுகி போவதற்கான ஆபத்து உள்ளதாக மலையக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மெனிங் சந்தையில் மரக்கறிகள் விலை
கொழும்பு மெனிங் சந்தையில் மரக்கறிகளின் மொத்த விலை உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதுடன், மரக்கறிகளின் தொடர் விநியோக வீழ்ச்சியே விலை உயர்வுக்கு காரணம் என கூறப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
