மேல் மாகாண மக்களுக்கு குறைந்த விலையில் மரக்கறி
மக்களுக்கு நிவாரண விலையில் மரக்கறிகளை வழங்கும் புதிய வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக மேல் மாகாணத்தில் சதொச நிறுவனம் ஊடாக செயற்படுத்துவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்திலுள்ள 75 சதொச நிறுவனங்கள் ஊடாக, மக்களுக்கு நிவாரண விலையில் மரக்கறி விற்பனை செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் 26 இடங்களிலும், கம்பஹா மாவட்டத்தில் 41 இடங்களிலும், களுத்துறை மாவட்டத்தின் 8 இடங்களிலும் மக்களுக்கு நிவாரண விலையில் மரக்கறி விற்பனை செய்யப்படவுள்ளது.
மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டத்தை ஏனைய மாகாணங்களுக்கும் விஸ்தரிக்க எதிர்பார்த்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.



