மரக்கறிகளின் விலை மீண்டும் உயர்கிறது
மேலதிக கையிருப்பு வருவதைத் தொடர்ந்து சந்தை நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதால் மரக்ககறிகளின் விலை மீண்டும் அதிகரித்து வருவதாக பொருளாதார மையங்களின் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
நாடு முழுவதிலும் உள்ள பொருளாதார மையங்களில், குறிப்பாக தம்புள்ளையில் அண்மைய நாட்களில் மரக்கறிகளின் விலைகள் வெகுவாகக் குறைந்திருந்த நிலையில், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக குறைந்தளவான வர்த்தகர்கள் மரக்கறிகளை கொள்வனவு செய்ய வந்திருந்தனர்.
எனினும், தமிழ், சிங்கள புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு அதிகளவு மரக்கறிகள் சந்தைக்கு வந்துள்ள நிலையில் இன்று சந்தை நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.
பூசணி, கோவா, வெள்ளரிக்காய் தவிர ஏனைய மரக்ககறிகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
புத்தாண்டுக் காலத்தை இலக்காகக் கொண்டு விவசாயிகள் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ளதால் தற்போது மரக்கறிகள் அதிகளவில் பொருளாதார நிலையங்களுக்கு கொண்டு வரப்படுகின்றன.

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri
