நினைத்து பார்க்க முடியாத அளவு உயர்ந்துள்ள கரட்டின் விலை : வரலாற்றில் முதல் முறை ஏற்பட்ட அதிகரிப்பு
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் வரலாற்றில் முதல் தடவையாக ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை நேற்று (13) இரவு முதல் 1000 – 1100 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
நுவரெலியா பிரதேசத்தில் உள்ள மரக்கறி விவசாயிகளிடம் இருந்து கரட்டை 900 ரூபாவிற்கு கொள்வனவு செய்ததாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர்.
வரலாறு காணாத விலை உயர்வு
லீக்ஸ், பீட்ரூட், முட்டைகோஸ் ஆகியவை ரூ.450-500இற்கும், போஞ்சி, கறி மிளகாய் ஆகியவை ரூ.750-800இற்கும் விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.1600க்கும், முள்ளங்கி கிலோ ரூ.350க்கும் விற்பனை செய்யப்படுவதாகவும் விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுவரெலியா பொருளாதார நிலையத்தில் ஒரு கிலோ கரட் 350-400 ரூபாவிற்கும், ஒரு கிலோ ப்ரோக்கோலி 750 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்றைய தினத்தில் ப்ரோக்கோலி ஒரு கிலோ 7000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவில் இந்திய வம்சாவளியினருக்கு ஆண் குழந்தைகள் பிறப்பு அதிகம்: சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள விடயம் News Lankasri
துப்பாக்கி முனையில் 16 வயது சிறுவனை உறவுக்கு..அதிரவைத்த வழக்கில் இளம் பெண்ணிற்கு பிடியாணை News Lankasri