முருங்கைக்காயின் விலை 3 ஆயிரம் ரூபா
சந்தையில் முருங்கைக்காய் கிலோ ஒன்றின் விலை 3,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.
தற்போது சந்தையில் மரக்கறிகளின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் நிலையில் இவ்வாறு முருங்கைக்காயின் விலை அதிவேகமாக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, முருங்கைக்காய் ஒரு கிலோ கிராமின் மொத்த சந்தை விலை 2,500 ரூபாவாக காணப்படுகின்றது.
அதிகரிக்கும் விலை
சந்தைகளில் மரக்கறிகளின் வரத்து குறைவடைந்துள்ளதன் காரணமாக இவ்வாறு வேகமான விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக பெய்த கடும் மழையின் தாக்கம் காரணமாக விவசாய செய்கை நிலங்கள் பாதிப்படைந்துள்ள நிலையில் மரக்கறிச் செய்கையும் பாதிப்படைந்துள்ளது.
குறிப்பாக மலைநாட்டில் உற்பத்தி செய்யப்படும், போஞ்சி, கரட், முட்டை கோவா உள்ளிட்ட மேலும் பல மரக்கறிகளும் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி உள்ளிட்டவற்றின் விலையும் சடுதியாக அதிகரித்துள்ளது.
இதேவேளை, ஒரு சில இடங்களில் மரக்கறிகளுக்கு தட்டுப்பாடான நிலையும் ஏற்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |