வெடுக்குநாறிமலை அராஜகத்துக்கு எதிராக யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் போராட்டத்திற்கு அழைப்பு
தமிழர் தாயகத்தில் தொல்லியல் என்ற போர்வையிலான பண்பாட்டு அழிப்பையும் சிங்கள பௌத்தமயமாக்கலையும் உடன் நிறுத்துமாறு கோரியும் வெடுக்குநாறிமலை ஆலயத்தில் நெடுங்கேணிப் பொலிஸாரால் திட்டமிட்டுக் கைது செய்யப்பட்டவர்களை உடன் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த கவனயீர்ப்புப் போராட்டமானது யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முன்றலில் நாளை (19) மேற்கொள்ளப்படவுள்ளது.
ஆக்கிரமிப்புக்கள்
இந்த போராட்டத்தினை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
மேலும், தமிழர் தாயகம் மீதான திட்டமிட்ட தொல்லியல் ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகச் சமூகமாக அணி திரள்வோம் என்றும் மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |