வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய உடைப்பு வழக்கு விசாரணை ஒத்தி வைப்பு
வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய உடைப்பு தொடர்பான வழக்கு எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா வடக்கு-ஒலுமடு, வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு மீதான விசாரணைகள் இன்று (10.04.2023) வவுனியா நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது.
விசாரணை அறிக்கை
இதன்போது பொலிஸார் விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பான விசாரணை அறிக்கையினை மன்றில் சமர்ப்பித்ததுடன், இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் மன்றுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
குறித்த கருத்துக்கள் தொடர்பில் கவனம் செலுத்திய மன்று,வழக்கை எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தது.
மேலும் இது தொடர்பான முழுமையான
விசாரணை அறிக்கையை மன்றுக்கு சமர்ப்பிக்குமாறும் விசாரணைகளை
துரிதப்படுத்துமாறும் மன்று கட்டளை பிறப்பித்திருந்தது.





துளியளவும் பந்தா இல்லாமல் விசேஷத்தை கொண்டாடிய சிவகார்த்திகேயன்.. மகிழ்ச்சியில் குடும்பத்தினர் Manithan

சத்தீஸ்கர் வெள்ளத்தில் சிக்கிய தமிழ் குடும்பம்! சுற்றுலா சென்றபோது 4 பேரும் உயிரிழந்த பரிதாபம் News Lankasri
