பேரினவாத செயற்பாட்டுக்கு ஆதரவாக தமிழ் எம்.பிக்கள்: வெடுக்குநாறியால் அதிர்ந்த நாடாளுமன்றம்
வவுனியா - வெடுக்குநாறி மலையில் கடந்த சிவன்ராத்திரி தினத்தன்று (08) வழிபாட்டின் போது கைது செய்யப்பட்ட 08 பேரை விடுதலை செய்யுமாறு கோரி நாடாளுமன்றத்தில் காரசாரமான விவாதாங்கள் இடம்பெற்றிருந்தன.
நாளுமன்றத்தின் நேற்றைய (19.03.2024) அமர்வின் போதே குறித்த விடயம் விவாதிக்கப்பட்டுள்ளது.
இதன் போது கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்,
“வெடுக்குநாறி மலை விவகாரத்தில் நடவடிக்கை எடுத்த தொல்பொருள் அமைச்சர் ஏன் குருந்தூர் மலை விவகாரத்தில் பிக்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை.
பெரும்பான்மையினத்தவர்களுக்கு ஒரு நீதி, தமிழ் மக்களுக்கு ஒரு நீதி இதுவே நமது நாட்டின் அடிப்படை பிரச்சினை.
அவ்வாறான ஒரு உரிமையை பறிப்பதற்கு எவருக்கும் உரிமை இல்லை.
குறிப்பாக வடக்கு, கிழக்கில் இடம்பெறுகின்ற பேரினவாதத்தின் ஒரு விடயமாகவே வவுனியா வெடுக்குநாறி மலையில் கடந்த சிவன் ராத்திரி தினத்தன்று (08) வழிபாட்டுக்கு சென்ற எட்டு பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இது உண்மையிலேயே கவலைக்குரிய ஓர் விடயம். ஏனெனில் மத வழிபாடு என்பது மத உரிமை என்பது எங்களுடைய இலங்கை யாப்பின் முக்கியமான அடிப்படை உரிமைகளில் ஒன்றாக இருக்கிறது.
அந்த உரிமையே எமது மக்களுக்கு மறுக்கப்படுகின்றது. இவ்விடையம் தொடர்பில் அரச சார் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மௌனம் அவர்களும் இவற்றுக்கு ஆதரவாக செயல்படுகின்றனரோ என்ற சந்தேகம் எழுகின்றது.
கைது செய்யப்பட்டவர்கள் மிக விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும்‘‘ என சாணக்கியன் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |