வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய பெயர் தொடர்பில் கூகுளில் ஏற்பட்டுள்ள மாற்றம்
வவுனியா வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்திற்கு 'வட்டமான பர்வத விகாரை' எனும் பெயர் கூகுளில் காட்டப்படுகின்றது.
வவுனியா - நெடுங்கேணி பகுதியில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயம் அப்பகுதி மக்கள் நெடுங்காலமாக வழிப்பட்டு வந்த இடமாகும்.
இந்நிலையில் வெடுக்குநாறி மலையில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தொல்பொருள் திணைக்களமும், நெடுங்கேணி பொலிஸாரும் பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வந்தனர்.
தொல்பொருள் திணைக்களம்
அத்துடன் தொல்பொருள்கள் சார்ந்த சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் கடந்த 2021ஆம் ஆண்டு வவுனியா நீதவான் நீதிமன்றில் வழக்கினையும் தாக்கல் செய்திருந்தனர்.
இவ்வாறு தொல்பொருள் திணைக்களம் மற்றும் பொலிஸார், பாதுகாப்பு தரப்பினரின் முழுமையான கண்காணிப்பில் இருந்த வெடுக்குநாறி மலையில் இருந்த ஆதிசிவன் விக்கிரகம், அதனை சூழ இருந்த அம்மன், பிள்ளையார், வேல், சூளம் என்பனவும் இருந்த இடத்தில் இருந்து உடைத்து அகற்றப்பட்டு வழிபாட்டு ஆலயம் முழுமையாக சேதமாக்கப்பட்டிருந்தது.
பெயர் மாற்றம்
இதன் தொடர்ச்சியாக கூகுளில் குறித்த ஆலயம் இருந்த வெடுக்குநாறிப் பகுதி 'வட்டமான பர்வத விகாரை' என பெயர் மாற்றம் செய்யப்பட்டு புராதன பௌத்த ஆலயமாக காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு திட்டமிட்ட ரீதியில் மேற்கொள்ளப்படும் குறித்த
செயற்பாடுகள் தொடர்பில் சைவ மக்கள் கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.