இராணுவ புலனாய்வாளர்களின் மிரட்டல்! தொடர் அச்சத்தில் வெடுக்குநாறிமலை பூசகர் உட்பட சிலர் (Video)
வெடுக்குநாறிமலை ஆலய விக்கிரகங்களை அடித்து உடைத்தவர்களை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்ற கேள்வியும் மன வேதனையும் அதிகரித்துக்கொண்டிருப்பதாக சிவகுரு ஆதின முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“வெடுக்குநாறி மலையில் உடைக்கப்பட்ட சிலைகளுக்கு பதிலாக அந்தந்த சிலைகள் தான் வைக்கப்பட்டன.
அதாவது முருகன் சிலை இருந்த இடத்தில் வேறொரு முருகன் சிலையும் சிவலிங்கம், அம்மன் சிலைகள் இருந்த இடத்தில புதிய சிவலிங்கம், அம்மன் சிலைகள் வைக்கப்பட்டன.அங்கு எந்த விதி மீறல்களும் நடைபெறவில்லை.
ஆனால் தொல்பொருள் திணைக்களத்தினர் தான் எமது கருத்தை நீதிமன்றில் தவறான அர்த்தத்தில் முன்வைத்தனர்.
இந்நிலையில் தொல்பொருள் திணைக்களத்தினர் மற்றும் நெடுங்கேணி பொலிஸார் ஆகியோர் வெடுக்குநாறிமலை ஆலய பூசகர் ஐயாவையும் நிர்வாகத்தை சேர்ந்த ஒருவரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து கைது செய்தனர்.
பின்னர் ஆலய நிர்வாகத்தின் தலைவரையும் செயலாளரையும் அழைத்து, நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
இதனூடாக நாங்கள் யாரையும் நினைத்த நேரத்தில் நினைத்ததை போன்று காரணங்கள் எதுவுமின்றி கைது செய்வோம் என்பதை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.”என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



