மர்ம காய்ச்சல் தொடர்பில் கேதீஸ்வரனுடன் தொலைபேசியில் உரையாடிய வடக்கு ஆளுநர்
யாழ்ப்பாண மாவட்டத்தில் பரவும் மர்ம காய்ச்சல் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரனுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
குறித்த உரையாடல் நேற்றையதினம் (11.12.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது, வடமராட்சியைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர்களின் உயிரிழப்புக்கான காரணம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் கலந்துரையாடல் நடைபெற்றதாகவும் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தடுப்பு நடவடிக்கைகள்
அத்துடன், இது எலிக்காய்ச்சலாக இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் அதற்கு அமைவாக தடுப்பு நடவடிக்கைகள் இன்று புதன்கிழமையிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புலோலி மற்றும் கற்கோவளம் ஆகிய பிரதேசங்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்தப் பகுதியில் முதல் கட்டமாக இந்தத் தடுப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனையடுத்து, தொடர் நடவடிக்கைகள் தொடர்பில் அறியத்தருமாறு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் ஆளுநர் கேட்டுக்கொண்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரர் எலோன் மஸ்கின் கல்வித் தகுதி: அவரின் மொத்த சொத்து மதிப்பு News Lankasri

UPSC தேர்வில் 5 முறை தோல்வியடைந்து 6-வது முயற்சியில் ஐஏஎஸ் அதிகாரியான பெண்.., யார் இவர்? News Lankasri
