கியூ.ஆர் அட்டை நடைமுறையில் வாழைச்சேனை எரிபொருள் நிலையம் முன்னிலை(Photos)
கியூ.ஆர் அட்டை நடைமுறையின் கீழ் எரிபொருள் வழங்கும் நடவடிக்கை மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இத்திட்டத்தின் மூலம் பொது மக்கள் இலகுவாக தமக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட எரிபொருளை சிரமமின்றி பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாக மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
அதனடிப்படையில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய சுற்று வட்ட சந்தியில் அமைந்துள்ள கே.ஜீ.சோமஸ்காந்தன் எரிபொருள் நிலையத்தின் ஊடாக 86.86 வீதம் மிகச் சிறப்பான முறையில் கியூ.ஆர் அட்டை நடைமுறையில் பின்பற்றி முன்னிலை வகிக்கும் வகையில் எரிபொருள் விநியோகத்தை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எரிபொருள் விநியோக நடவடிக்கை

தொடர்ந்தும் அரசாங்கத்தின் கியூ.ஆர் அட்டை நடைமுறைகளை பின்பற்றி எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை மக்களுக்கு சிரமமின்றி முன்னெடுக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் அனைத்து எரிபொருள் விநியோக நிலையங்களின் உரிமையாளர்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.


கியூ.ஆர் அட்டை திட்டத்தின் மூலம் நீண்ட வரிசைகள் மற்றும் மக்கள் கூட்டங்கள்
சிரமமின்றி இலகுவாக அரச மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றுவோர் உள்ளிட்ட
முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள், மதகுருமார்கள்,விவசாயிகள், என பல்வேறு
தரப்பினர்கள் உள்ளடங்களாக அதிகமானோர் தமக்கான எரிபொருளை குறுகிய நேரத்துக்குள்
பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri