திரி சாரணர் பிரிவில் சாதனை படைத்த வவுனியா இளைஞன்
திரி சாரணர் பிரிவில் சாரணர் பேடன் பவல் விருதைப் பெற்ற வவுனியாவைச் சேர்ந்த 2ஆவது பெருமை கொண்டவராக, கணேசலிங்கம் யதுகணேஷ் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
11 வருடங்களின் பின் இந்த சாதனையை அவர் நேற்று (16.12.2024) செய்துள்ளார்.
இலங்கை சாரணர் சங்கத்தின் தலைமைக் காரியாலயத்தினால் வழங்கப்படும் திரிசாரணர் பிரிவின் உயர் விருதான பேடன்பவல் விருதினை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய பழைய மாணவனும், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடப் பட்டதாரியும், தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தற்காலிகப் பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றுகின்ற கணேசலிங்கம் யதுகணேஷ் பெற்றுக் கொண்டுள்ளார்.
பேடன்பவல் விருது
இவர் வவுனியா மாவட்ட சாரணர் கிளையின் சமாதானத்தின் தூதுவரின் மாவட்ட இணைப்பாளர் ஆவார். அத்துடன், ஜப்பானில் நடைபெற்ற சர்வதேச ஜம்போரியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய பெருமையும் அவருக்கு உண்டு.
வவுனியாவிற்கு முதலாவது பேடன்பவல் விருதானது 2013ஆம் ஆண்டு சுந்தரலிங்கம் காண்டீபனுக்கு கிடைக்கபெற்று 11வருடங்களுக்கு பின்பு, இரண்டாவது பேடன்பவல் விருது கணேசலிங்கம் யதுகணேஷிற்கு கிடைக்கபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |