வவுனியாவில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் குதித்த ஆசிரியர்கள்
வவுனியா- வீரபுரம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், கடந்த வாரம் பாடசாலையில் உயர்தர மாணவர்களுக்கான ஒன்று கூடல் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
இதன்போது இளைஞர் ஒருவர் ஆண் ஆசிரியர் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி மாணவி ஒருவரிடம் பேச வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் மீது தாக்குதல்
இதற்கு ஆசிரியர் மறுப்பு தெரிவித்த நிலையில் அதனால் ஏற்பட்ட முரண்பாட்டினால் குறித்த ஆசிரியர் தங்கியிருந்த வீட்டிற்கு சென்றவர்கள் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக நேற்று (18) வரைபொலிஸார் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் செட்டிகுளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
பணிப்புறக்கணிப்பு
இந்நிலையில் தமக்கு போதிய பாதுகாப்பு இல்லை என தெரிவித்து பாடசாலையின் அனைத்து ஆசிரியர்களும் இன்று சுகவீன விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை இதற்கு முன்னரும் இரு ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவங்களும் குறித்த பாடசாலையில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
படையப்பா ரீ ரிலீஸ்: விஜய் கில்லி படம் செய்த சாதனையை முறியடிக்குமா.. முன்பதிவு வசூல் விவரம் Cineulagam
பிரித்தானியாவில் இந்திய வம்சாவளியினருக்கு ஆண் குழந்தைகள் பிறப்பு அதிகம்: சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள விடயம் News Lankasri
துப்பாக்கி முனையில் 16 வயது சிறுவனை உறவுக்கு..அதிரவைத்த வழக்கில் இளம் பெண்ணிற்கு பிடியாணை News Lankasri