வவுனியா பல்கலைக்கழகம் ஜனாதிபதியால் திறப்பு! (Video)

President Vavuniya University Today SL
By Thileepan Feb 11, 2022 09:35 AM GMT
Report

வவுனியா பல்கலைக்கழகத்தின் புதிய கட்டிடடம் மற்றும் பல்கலைக்கழக கல்வெட்டு என்பவற்றை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அங்குரார்ப்பணம் செய்து வைத்துள்ளார். 

இலங்கையின் 17 ஆவது பல்கலைக்கழகமாக கடந்த ஓகஸ்ட் மாத்தில் இருந்து செயற்பட தொடங்கிய வவுனியா பல்கலைக்கழகத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு துணைவேந்தர் கலாநிதி ரி.மங்களேஸ்வரன் தலைமையில் இன்று (11.02) இடம்பெற்றது.

இந் நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்ட இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச பல்கலைக்கழக பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டினை அங்குரார்ப்பணம் செய்து வைத்ததுடன், பல்கலைக்கழத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மண்டபத்தினையும் திறந்து வைத்தார்.

வவுனியா பல்கலைக்கழகம் ஜனாதிபதியால் திறப்பு! (Video) | Vavuniya University President Today Sl

இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி,

இது ஒரு விசேடமான நாள் சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்துக்கு அமைய இந்த பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு இந்த பிரதேசத்தினை கல்வி பொருளாதார ரீதியில் உயர்வடைய இந்த பல்கலைக்கழகம் இன்று திறந்து வைக்கப்படுகிறது.


எனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டது போல நாட்டில் புதிய பல்கலைகழகம் உருவாக்கப்பட்டு இந்த பிரதேச மாணவர்களிடம் கையளிக்கபடுவதில் பெருமையடைகிறேன்.

இந்த பல்கலைகழகம் ஊடாக இளமாணி பட்டங்களை மட்டுமல்ல மேலதிக பட்டங்களையும், வேலை வாய்ப்புகளையும், வெளிநாட்டு வாய்ப்புகளையும் உருவாக்கி எமது இளைய சமுதாயத்துக்கு பெற்று கொடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுத்து செல்ல தயாராக வேண்டும்.

இந்த பல்கலை கழகம் ஊடாக தொழில் நுட்ப சவால்களை முறியடித்து நாம் முன்னோக்கி செல்ல வேண்டும்.எதிர் வரும் காலங்களில் எமது நாட்டில் தொழில் வாய்ப்புகளை உருவாக்க கூடிய கல்வி முறைகளை நாம் உருவாக்க அயராது உழைக்க வேண்டும்.

வவுனியா பல்கலைக்கழகம் ஜனாதிபதியால் திறப்பு! (Video) | Vavuniya University President Today Sl

எமது நாடு விவசாய நாடு என்பதால் எதிர்காலத்தில் விவசாய துறையில் பாடத்திட்டங்களை உருவாக்கி அவற்றில் பட்டங்களை பெற்று கொடுத்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தொழில் வாய்ப்புகளை பெற்று கொடுக்க பல்கலைகழகங்கள் முன்வர வேண்டும்.

எதிர் காலத்தில் மிக அதிகளவான மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்க்க எதிர்பார்த்து இருக்கிறோம். அதிகளவான மாணவர்கள் உயர்தரத்திலே சித்தியடைந்தாலும் அனைவரையும் பல்கலைகழகங்களுக்கு உள்ளீர்க்க முடியவில்லை எதிர்காலத்தில் இந் நிலைமை மாற்றியமைக்கப்படும்.

பல்கலைகழகங்களில் பட்ட படிப்பு கற்கை நெறிகளுக்கு மேலதிகமாக டிப்ளோமா,சான்றிதழ் கற்கை நெறிகள் புதிது புதிதாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் 30 வருட யுத்த நிலையை முடிவுக்கு கொண்டு வந்து எமது இளைய சமுதாயத்தை அபிவிருத்தி பாதையில் அழைத்து செல்ல உங்கள் அனைவரையும் அழைக்கின்றேன் எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.

முன்னதாக பல்கலைகழகத்தின் விடுதியில் அமைந்துள்ள மைதானத்தில் கெலிகொப்ரர் மூலம் வருகைதந்த ஜனாதிபதி பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார் .மைதானப் பகுதிக்கு வருகை தந்திருந்த மக்களிடம் காணிப்பிரச்சினை, விவசாயப் பிரச்சினை மற்றும் அவர்களது தேவைகள், கோரிக்கைகள் தொடர்பாகவும் ஜனாதிபதி கேட்டறிந்து கொண்டார். இதன்போது மக்களது பிரச்சனைகள் தொடர்பில் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகளுடனும் ஜனாதிபதி கலந்துரையாடி இருந்தார்.

இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், கு.திலீபன், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அதிகாரிகள், அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.  




GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US