வவுனியாவில் முச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் பூட்டும் செயற்பாடு ஆரம்பம்
வவுனியாவில் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் பூட்டும் செற்பாடு இன்று(14) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் எஸ். ரவீந்திரன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இதுவரை காலமும் வவுனியா மாவட்டத்தில் முச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் பொருத்தமையினால் பாவனையாளர்கள் அசெளகரியங்களை எதிர்கொண்டிருந்தனர்.
மீட்டர் பூட்டும் செயற்பாடு
இதனை கருத்தில் கொண்டு வவுனியாவில் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் பூட்டும் செயல்பாடு முன்னெடுக்கப்பட்டது.
முதலாவது கிலோமீட்டருக்கு 130 ரூபாயும் இரண்டாவது மீட்டரில் இருந்து கிலோ மீட்டருக்கு 100 ரூபாயும் அறவிடுவதற்கான திட்டமும் இதன் மூலம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





