தொடருந்துடன் மோதுண்ட முச்சக்கரவண்டி! சம்பவ இடத்திலேயே பலியான பெண்
வவுனியா - தாண்டிக்குளம் தொடருந்து நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து இன்று(23.04.2026) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து குறித்த மேலதிக தகவல்
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கடுகதி தொடருந்து, தாண்டிக்குளம் பகுதியில் இன்று மதியம் சென்று கொண்டிருந்த போது, குறித்த பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற தொடருந்து கடவையை கடக்க முற்பட்ட முச்சக்கரவண்டி ஒன்று தொடருந்துடன் மோதுண்டுள்ளது.
இந்த விபத்தின் போது முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்ததுடன், அதில் பயணித்த பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

தரணிக்குளம் பகுதியைச் சேர்ந்த ராசலிங்கம் தவமணி என்ற 75 வயதுடைய வயோதிபப் பெண்ணே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
மேலும், முச்சக்கர வண்டியை செலுத்திய சாரதி கவலைக்கிடமான நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



You may like this video..
அந்த கடையை கொண்டுபோய் சுடுகாடு பக்கத்துல வைங்க.. CM விஜய்க்கு நடிகர் பார்த்திபன் கொடுத்த ஐடியா Cineulagam