வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் உயர்தர பரீட்சையில் சாதனை
வவுனியா (Vavuniya) தமிழ் மத்திய மகா வித்தியாலயம், வெளிவந்த உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் கணித பிரிவில் முதல் 10 இடத்தில் 8 இடங்களை தம்வசப்படுத்தியுள்ளது.
இதில் முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம், ஆறாம், ஏழாம், ஒன்பதாம், பத்தாம் இடங்களை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவ மாணவிகள் பெற்றுள்ளதோடு முதலாம் இடத்தினை ஆ.ஜிலோட்சன் என்ற மாணவன் பெற்றுள்ளார்.
இதேவேளை, விஞ்ஞான பிரிவில் பத்து இடங்களில் மூன்று இடங்களை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவ மாணவிகள் பெற்றுள்ளார்கள். இதில் ஆறாம், ஏழாம், எட்டாம் இடங்களை அவர்கள் பெற்றுள்ளனர்.
மாணவ மாணவிகளின் சாதனை
இதேவேளை, ஈ டெக்கில் (E - Tech) முதலாம், மூன்றாம் இடங்களை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவ மாணவிகள் பெற்றுள்ளதோடு முதலாம் இடத்தினை கமலநாதன் லோகநாதன் பெற்றுள்ளார்.

பி டெக்கில் (B - Tech) 7 ஆம் இடத்தினையும் வர்த்தக பிரிவில் முதல் 10 இடத்தில் மூன்றாம் மற்றும் ஐந்தாம் இடங்களை அவர்கள் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri