வவுனியா தும்புத் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து(Photos)
வவுனியா- ஈரப்பெரியகுளம் தும்புத் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு தொழிற்சாலையின் ஒரு பகுதி தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.
இந்த சம்பவம் இன்று (21.07.2023) மாலை இடம்பெற்றுள்ளது.
அறுவடையின் பின்னர் வயலுக்கு வைக்கப்பட்ட தீ பரவி, தும்புத் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் அமைந்துள்ள தும்புத் தொழிற்சாலையின் ஒரு பகுதியில் திடீரென தீ பரம்பல் ஏற்பட்டதை அவதானித்த அங்கு கடமையில் இருந்தவர்கள் உடனடியாக பொலிஸாருக்கும், வவுனியா மாநகரசபை தீயணைப்பு பிரிவினருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.
தீயை கட்டுப்படுத்த கடும் முயற்சி
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா மாநகரசபை தீயணைப்பு பிரிவினர் இராணுவத்தினரின் துணையுடன் தீயை கட்டுப்படுத்த கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
எனினும் தும்புத் தொழிற்சாலையின் இரு பகுதியில் தீப்பரம்பல் ஏற்பட்டுள்ளது. கட்டுப்படுத்த கடும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் ஈரப்பெரியகுளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |









உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 16 மணி நேரம் முன்

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
