வவுனியாவில் நடைபாதை வியாபார நிலையங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை
வவுனியா சந்தைசுற்றுவட்டவீதியில் அமைந்துள்ள நடைபாதை வியாபார நிலையங்கள் நகரசபையால் அகற்றப்பட்டுள்ளது.
வவுனியா பொது வைத்தியசாலை சந்தியில் இருந்து ஹொரவப்பொத்தான வீதி மற்றும் சந்தை உள்வட்ட வீதி ஆகியவை நடைபாதை வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதன் காரணமாக குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அடிக்கடி வாகன நெரிசல் ஏற்ப்பட்டுவருவதுடன், விபத்துக்களை சந்திக்கும் நிலைமையும் எற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
நடைபாதையினை ஆக்கிரமிக்கும் வியாபார நிலையங்கள்
இது தொடர்பில் நகரசபை நடவடிக்கை எடுத்திருந்தபோதிலும் தினந்தோறும் நடைபாதையினை ஆக்கிரமிக்கும் வியாபார நிலையங்கள் அதிகரித்து செல்வதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சந்தைசுற்றுவட்ட வீதிக்கு இன்றையதினம் சென்ற வவுனியா நகரசபை உத்தியோகத்தர்கள் மற்றும் போக்குவரத்து பொலிஸார் நடைபாதை வியாபாரநிலையங்களை அகற்றியதுடன், அவர்களது பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இதேவேளை ஹொரவப்பொத்தான வீதியில் அமைந்துள்ள நடைபாதை விற்பனை நிலையங்களையும் அகற்றுவதற்கான நடவடிக்கையினை நகரசபை எடுக்வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |