வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் முன்மாதிரியான செயற்பாடு
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினால் வாராந்த சந்தையானது நேற்றையதினம்(17) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறிப்பாக கடந்த காலங்களிலே ஏற்பட்ட பொருளாதார பிரச்சனை காரணமாக வாழ்வாதார ரீதியாக மிகவும் நலிவுற்ற நிலையில் அவர்களின் வாழ்வாதாரத்தினை அபிவிருத்தி செய்யும் நோக்கில் குறித்த சந்தையானது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் பா.பாலேந்திரன், மாநகரசபை மேயர் சு.காண்டீபன், பிரதி முதல்வர் ப.கார்த்தீபன், மற்றும் உள்ளூராட்சி சபை உதவி ஆணையாளர் தெ.ரதீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு வாராந்த சந்தையினை ஆரம்பித்து வைத்திருந்தனர்.
இந்நிகழ்வில் தெற்கு தமிழ் பிரதேச சபை உப தவிசாளர், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், தெற்கு தமிழ் பிரதேசசபை செயலாளர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருத்தனர். இதேவேளை இனிவரும் காலங்களில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் இச்சந்தை நடைபெறவுள்ளது.





உக்ரைனுக்கு நேட்டோ பாணியிலான பாதுகாப்பு: முன்மொழிவை ஒப்புக் கொண்ட புடின்! ஜெலென்ஸ்கி வரவேற்பு News Lankasri

4 நாட்களில் வேறலெவல் வசூல் வேட்டையில் ரஜினியின் கூலி... தமிழகத்தில் மட்டும் எவ்வளவு தெரியுமா? Cineulagam
