மூன்றுமுறிப்பு கிராம அலுவலர் பிரிவில் மூத்த பிரஜைகளுக்கு தடுப்பூசி வழங்கும் செயற்பாடு
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட மூன்றுமுறிப்பு கிராம அலுவலர் பிரிவில் மூத்த பிரஜைகளுக்குத் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு இராணுவத்தால் வீடு வீடாகச் சென்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாடு பூராகவும் இதுவரை தடுப்பூசிகள் ஏற்றாத 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த பிரஜைகளுக்கு இராணுவத்தினரால் நடமாடும் சேவை ஊடாக வீடுகளுக்குச் சென்று தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில், வவுனியா மாவட்டத்தில் 5 ஆயிரத்து 800 மூத்த பிரஜைகளுக்குத் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றது.
அதன் ஒரு கட்டமாக வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மூன்றுமுறிப்பு கிராம அலுவலர் பிரிவில் 40 மூத்த பிரஜைகளுக்கு அஸ்ரா செனிக்கா கோவிட் தடுப்பூசிகள் இராணுவத்தால் வீடுகளுக்குச் சென்று ஏற்றப்பட்டது.
இதன்போது மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதையும் அவதானிக்க முடிகிறது.





பிரித்தானியாவை நெருக்கும் ஆறாவது வெப்ப அலை... 14 லட்சம் மக்களுக்கு குழாய் நீர் பயன்பாட்டுத் தடை News Lankasri
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri