வவுனியா ஆசிரியர் பெயரை எழுதிவிட்டு தவறான முடிவெடுத்த மாணவன்: பொலிஸார் தீவிர விசாரணை
வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் ஆசிரியரின் பெயரை எழுதி விட்டு பாடசாலை மாணவன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று (11.05.2023) பதிவாகியுள்ளது.
பாடசாலை மாணவன்
வவுனியா பாடசாலையொன்றில் தரம் 10 இல் கல்வி பயிலும் 14வயதுடைய பாடசாலை மாணவன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த சிதம்பரபுரம் பொலிஸார் கடிதம் ஒன்றை மீட்டுள்ளனர்.
மாணவனின் கடிதம்
குறித்த கடிதத்தில் ''என் சாவிற்கு காரணம் தமது பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர்'' என ஆசிரியரின் பெயரை குறிப்பிட்டு மாணவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனைக்காக மாணவனின் சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் மாணவனின் பெற்றோரிடம் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன், குறித்த பாடசாலை ஆசிரியர் மற்றும் மாணவர்களிடமும் வாக்குமூலங்களைப் பெற்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக சிதம்பரபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW |