வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலய மாணவர்கள் அலரி மாளிக்கைக்கு கல்விச் சுற்றுலா
வவுனியா, அல் இக்பால் மகாவித்தியாலய மாணவர்கள் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் வாசல் தளமான அலரி மாளிகைக்கு கல்விச் சுற்றுலா மேற்கொண்டுள்ளனர்.
இரண்டு நாள் கல்விச் சுற்றுலா பயணமாக தரம் 06, 07, 08, 09 ஆகிய வகுப்பு மாணவர்களுடன் பாடசாலை அதிபர் எம்.எம்.அன்பஸ் தலைமையில் கொழும்புக்கு வருகை தந்த அவர்கள் பல்வேறு இடங்களை பார்வையிட்ட பின், நேற்று மாலை (17.07) பிரதமரும், கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களது உத்தியோக பூர்வ வாசல் தளமான அலரி மாளிகைக்கு சென்றிருந்தனர்.
இதன்போது மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அலரி மாளிகையின் வரலாறு தொடர்பாக அங்கிருந்த பிரதமர் அலுவலக உத்தியோகத்தர்கள் தெளிவுபடுத்தியதுடன், அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துகளையும் கேட்டறிந்து கொண்டனர்.
இதன்போது, பிரதமர் விசேட கூட்டம் ஒன்றில் குறித்த வாசல் தளததில் கலந்து கொண்டிருந்தமையால் அவர் நேரடியாக குறித்த பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களை நேரடியாக சந்திக்க முடியாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.



