வவுனியாவில் ஜனவரி முதல் இன்று வரை 806.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு
வவுனியாவில் இவ்வருடம் ஜனவரி முதல் இன்று அதிகாலை 8 மணிவரையுடன் நிறைவடைந்த காலப்பகுதியில் 806.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இந்த விடயத்தை மாவட்ட வளிமண்டல நிலைய பொறுப்பதிகாரி தா.சதானந்தன் தெரிவித்துள்ளார்.
இடைக்கால பருவ மழை மாலை வேளைகளில் இன்னும் சில தினங்கள் நீடிக்கும் எனவும், இடி மின்னல் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் பொது மக்கள் அவதானமாகச் செயற்பட வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இம்மாதம் 18ஆம் திகதியிலிருந்து இன்று 25ஆம் திகதி அதிகாலை 8 மணியுடன் நிறைவடைந்த காலப்பகுதியில் மட்டும் 117.1 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இடைக்கால பருவ மழை இன்னும் சில தினங்கள் நீடிக்க வாய்ப்புக்கள் காணப்படுகின்றது.
எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என மாவட்ட வளிமண்டல நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்துள்ளார் .

உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 14 மணி நேரம் முன்
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட்.. ரிலீஸுக்கு முன் இவ்வளவு கோடி லாபமா Cineulagam
முத்துவேல், சக்திவேல் உதவியால் சிறையிலிருந்து வெளிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புரோமோ இதோ Cineulagam