வவுனியாவில் பொருட் கொள்வனவில் குவியும் மக்கள் கூட்டம்
நாடு பூராகவும் விதிக்கப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடு இன்று அதிகாலை 4 மணிக்கு நீக்கப்பட்டதும், வவுனியா நகரில் பொருட் கொள்வனவுக்காக அதிகளவிலான மக்கள் வருகை தந்தமையை அவதானிக்க முடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
கோவிட் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மாதம் 21ஆம் திகதி நாடு பூராகவும் விதிக்கப்பட்ட பயணக்கட்டுப்பாடனது இன்று அதிகாலை 4 மணிக்கு நீக்கப்பட்டது.
இதன் காரணமாக மக்கள் தமக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதற்காக அதிகளவில் நகருக்கு வருகை தந்திருந்ததுடன், வர்த்தக நிலையங்களுக்கு முன்னால் அதிகளவிலான சனக் கூட்டத்தையும் அவதானிக்க முடிந்ததாக தெரியவருகிறது.
இந்த நிலையில் சுகாதார நடைமுறைகள் தொடர்பில் கண்காணிக்கும் நடவடிக்கையில் பொலிஸாரும், சுகாதாரப் பிரிவினரும் ஈடுபட்டுள்ளனர்.










உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
