வவுனியா வடக்கு பிரதேச சபையின் பாதீடு வெற்றி!
சிறிலங்கா சுதந்திரக் கட்சி வசம் சென்ற வவுனியா வடக்கு பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு 4 மேலதிக வாக்குகளால் நேற்று (27) நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு வசமிருந்த வவுனியா வடக்கு பிரதேச சபையின் பாதீடு முன்னாள் தலைவர் சு.தணிகாலத்தினால் முன்வைக்கப்பட்டு இரண்டு தடவைகள் தோல்வியடைந்த நிலையில் புதிய தவிசாளர் தெரிவு அண்மையில் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில், சபையின் புதவி தவிசாளர் த.பார்த்தீபன் தலைமையில் 2022 ஆம் ஆண்டுக்கான புதிய பாதீடு சபை அமர்வில் முன்வைக்கப்பட்டது.
பாதீடு மீதான விவாதங்கள் இடம்பெற்ற பின் பாதீடு இரகசிய வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
இதில் பாதீட்டுக்கு ஆதரவாக 15 வாக்குகளும், பாதீட்டுக்கு எதிராக 11 வாக்குகளும் கிடைத்தன. இதனால் 4 மேலதிக வாக்குகளினால் பாதீடு வெற்றி பெற்றது.
இதன்மூலம் சுதந்திரக் கட்சி தனது ஆட்சியை வவுனியா வடக்கு பிரதேச சபையில் உறுதிப்படுத்திக் கொண்டது.
பார்த்தாலே பசி எடுக்கும் மொச்சைப் பருப்பு கருவாட்டு குழம்பு : இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது! Manithan