தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை முறையாக கையாளத் தவறும் வவுனியா நகரசபை
2016 ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டம், இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு ஆறு வருடங்கள் கடந்துள்ள போதும் வவுனியா நகரசபை உரிய வகையில் கையாள தவறுகின்றது என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி பொதுமகன் ஒருவர் முன்வைத்த விண்ணப்பங்களுக்குரிய பதில்களை வழங்கத் தவறியுள்ளனர்.
2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் திகதி விண்ணப்பம் நகரசபையில் நேரடியாக வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் விண்ணப்பம் வழங்கப்பட்டு வேலை நாட்கள் ஒரு மாதத்தை கடந்தும் இதுவரை பதிலளிக்கவில்லை.
14 வேலை நாட்களில் பதிலளிக்க வேண்டும்
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக முன்வைக்கப்படும் விண்ணப்பங்களுக்கு 14 வேலை நாட்களில் பதிலளிக்க வேண்டும்.
அவ்வாறு குறித்த விண்ணப்பத்தில் உள்ள கேள்விக்கு பதில் வழங்க முடியாதாயின் அதற்கான சரியான காரணத்தை அரச அதிகாரிகள் வழங்க வேண்டும். என்பதே நியதி.
விண்ணப்ப படிவத்தை வழங்கியதும் குறித்த நரசபையினர் நேரில் வருகை தந்து பார்வையிடுமாறும், ஏன் வினவுகின்றீர்கள், நீங்கள் யாரெனவும் பல்வேறான விடயங்களை வினவுகின்றனர்.
அதேவேளை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு அமைவாக தகவலைக் கோரும் நபரின் சுய விபரங்களை சம்மந்தப்பட்ட அதிகாாிகள் கோர வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam
