பொலிஸ் நிலையம் அமைந்துள்ள ஆதனத்தினை விடுவிக்குமாறு கோரியுள்ள வவுனியா மாநகரசபை
வவுனியா தலைமை பொலிஸ் நிலையம் அமைந்துள்ள முழு ஆதனத்தினையும் விடுவிக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக வவுனியா மாநகரசபையின் முதல்வர் சு.காண்டீபன் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாநகர சபையின் மாதாந்த அமர்வு முதல்வர் சு.காண்டீபன் தலைமையில் இன்று இடம்பெற்றது.
இதன்போது கடந்த அமர்வில் முன்வைக்கப்பட்ட பிரேரணைகளிற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வரால் தெளிவுறுத்தப்பட்டது.
கடிதம் மூலம் கோரிக்கை
அந்தவகையில் வவுனியா தலைமை பொலிஸ் நிலையம் அமைந்துள்ள மாநகர சபைக்கு சொந்தமான காணியை விடுவிப்பது தொடர்பாக கடந்த அமர்வில் பேசப்பட்டிருந்தது.
அது தொடர்பாக பதிலளித்த முதல்வர், வவுனியா பொலிஸ் நிலையம் அமைந்துள்ள முழு ஆதனத்தினையும் விடுவித்து மாநகர சபைக்கு வழங்குமாறு நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் மூலம் கோரப்பட்டுள்ளதாக சபைக்கு தெரிவித்திருந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



