வவுனியா நகரசபை உறுப்பினர் ஒருவர் கோவிட் தொற்றால் மரணம்
வவுனியா நகரசபை உறுப்பினர் ஒருவர் கோவிட் தொற்று காரணமாக இன்று (20.09) மரணமடைந்துள்ளார்.
கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வவுனியா நகரசபைக்குச் சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் தெரிவு செய்யப்பட்டிருந்த தேக்கவத்தையில் வசித்து வரும் த.புஞ்சிகுமாரி என்பவரே இவ்வாறு மரணமடைந்தவராவார்.
கடந்த ஒரு வாரங்களுக்கு மேலாக கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையின் கோவிட் விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருந்தார்.
எனினும் சிகிச்சை பலனின்றி இன்று மாலை (20.09) மரணமடைந்துள்ளார். இவர், சிறிலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திய போதும் இன, மத பேதங்களுக்கு அப்பால் ஆளும் கட்சி உறுப்பினராகச் செயற்பட்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
கடந்த வாரம் டாப் இடத்தில் வந்த அய்யனார் துணை இந்த வார நிலைமை... டாப் சீரியல்களின் டிஆர்பி விவரம் Cineulagam